பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அம்மாபாளையம், லாடபுரம் கிராமங்களில் முயல் வேட்டை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் முழுவதும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முயல் வேட்டை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா ஊராடங்கால் கடந்த வருடம் முயல் வேட்டை திருவிழா கொண்டாடப்படவில்லை. இந்த வருடமும் கொரோனாவினால் கோவில் திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முயல் வேட்டை திருவிழாவிற்கு சித்திரை மாதத்தில் அனுமதி மறுக்கப்படும் என்று கருதப்படுகிறது. இதனால் அம்மாபாளையம், லாடபுரம் ஆகிய கிராமங்களில் […]
