பாடத்திட்டத்தில் மூன்றாவதாக ஒரு மொழி சேர்க்கப்பட்டுள்ளது என வெளியான தகவல் தவறானது என பள்ளி கல்வித்துறை விளக்கம் கொடுத்துள்ளது. இந்தியாவுக்கான புதிய கல்வி கொள்கை 2020-ஐ மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு முன்னதாக தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையில் இடம்பெற்றிருந்த மும்மொழி கொள்கை உள்ளிட்டவைகளுக்கு தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயம் என்ற பரிந்துரையை நீக்கி புதிய கல்விக் கொள்கை வரைவு […]
