தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு 24 மணி நேரம் வழங்கப்பட்ட மும்முனை மின்சாரம் நிறுத்தப்பட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதற்கு முன்னதாக அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவியது. அதுமட்டுமன்றி இரண்டு கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களை கவரும் வகையிலான பல்வேறு வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கை மூலம் வெளியிட்டனர். […]
