பிகாரில் இலவச கோவிட்-19 தடுப்பூசி வழங்குவதாக வாக்குறுதியளித்த பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ள மஹாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வங்கதேசம் அல்லது கஜகஸ்தானைச் சேர்ந்தவர்களாக அந்தக் கட்சி கருதுகிறதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை அமலில் உள்ள காரணத்தால், மும்பை, தாதரிலுள்ள சாவர்கர் மண்டபத்தில் வைத்து நடைபெற்ற சிவசேனா கட்சியின் தசரா பேரணியில் பேசிய உத்தவ் தாக்கரே, பிகாரில் இலவச கோவிட்-19 தடுப்பூசி வழங்குவதாக வாக்குறுதியளித்துள்ள பாஜக மற்ற மாநில மக்கள் […]
