மகாராஷ்டிராவின் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் ,மும்பையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு, இடையூறு இருக்காது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது . இதன் காரணமாக அம்மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 2021 ம் ஆண்டு ஐபிஎல் தொடரானது வருகின்ற 9ம் தேதி ,தொடங்க உள்ளது. இதற்காக 6 நகரங்களில் உள்ள மைதானங்களில் ஐபிஎல் தொடர்கள் நடைபெற உள்ளன. அந்த 6 மைதானங்களை […]
