மதரீதியில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த புகாரில் நடிகை கங்கனா ரனாவத்தும் அவரது சகோதரியும் நேரில் ஆஜராக மும்பை போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. நடிகை கங்கனா ரனாவத்திற்க்கும் மகாராஷ்டிர அரசுக்கும் இடையே மோதல் தீவிரமாக இருந்தபோது டுவிட்டரில் கங்கனா வெளியிட்ட பதிவுகள் மதரீதியில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சாந்தல் மீது பாந்த்ரா காவல் நிலையத்தில் கடந்த மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. […]
