அதிமுகவில் உரிமை கோர சசிகலாவிற்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை என்று ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவர் குருபூஜைக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு ஓ பன்னீர்செல்வம் பேசிய கருத்து அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் சசிகலாவை கட்சியில் சேர்ப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறினாலும், ஒரு சிலர் சசிகலாவுக்கு ஆதரவாக பேசினார்கள். இதனால் அதிமுகவிற்குள் சசிகலாவுக்கு ஆதரவு எதிர்ப்பு என இரு அணிகள் தோன்றியதாக கூறப்பட்டது. இது […]
