தமிழகத்தில் பல்வேறு மாவட்டங் களுக்கு இடையே முன்பதிவில்லா 11 சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பழனியில் இருந்து மதுரைக்கு நவம்பர் 10 ஆம் தேதியிலிருந்து மாலை 4.45 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.மதுரையில் இருந்து பழனிக்கு வரும் நவம்பர் 11 ஆம் தேதியில் இருந்து காலை 7.20 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். கோவையில் இருந்து பழனிக்கு வருகின்ற நவம்பர் 10ஆம் தேதி முதல் மதியம் 2.10 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். […]
