ஊட்டி மலை ரயிலில் மே 1 ஆம் தேதி முதல் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் மலைகளின் அரசி என்று அழைக்கப்படுகின்றது. அங்குள்ள இயற்கை அழகை கண்டு ரசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கோடைக் காலம் தொடங்கி விட்டாலே சுற்றுலாப்பயணிகளின் எண்ணத்தில் முதலில் வருவது ஊட்டி. தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் கடந்த சில நாட்களாக ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளின் […]
