பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி மீது நேற்று முன்தினம் கத்தி குத்து தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி விரிவுரை ஆற்ற இருந்த நேரத்தில் மேடையில் திடீரென ஏறிய நபர் சல்மானை கத்தியால் குத்தியுள்ளார். இதில் சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த சல்மான் ஆபத்தான சூழலில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். முதலில் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை […]
