வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக ஆட்சியர் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆட்சியர் பேசியதாவது, “காவல், தீயணைப்பு, பேரிடர் மீட்பு படை, ஊர்க்காவல், தேசிய மாணவர் படை உள்ளிட்ட பிரிவினர்களை ஒருங்கிணைத்து பேரிடர் காலங்களில் பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட […]
