சங்கரன் கோவிலுக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சங்கரன் கோவிலுக்கு அருகில் இருக்கும் பெருங்கோட்டூர் கிராமத்தில் வசிக்கும் தி.மு.க பிரமுகர் காளைப்பாண்டியன், அந்த ஊரில் இரண்டு முறை பஞ்சாயத்து தலைவராக இருந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று அவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது எதிரில் வந்த வாகனம் மோதியதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். வாகனத்தை ஓட்டி வந்தவர், கட்டநார்பட்டியில் வசிக்கும் […]
