பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் வெட்டி கொல்லப்பட்டதை கண்டித்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். செங்கல்பட்டு மாவட்டத்தின் இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கோவைப்பாக்கம் என்ற ஊரை சேர்ந்த ராமச்சந்திரன். 50 வயதான இவர் அ.தி.மு.க சார்பில் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவராக இருத்துள்ளார் . நேற்று அவர் கடப்பாக்கம் அடுத்த கோவைப்பாக்கம் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் வழிமறித்து சரமாரியாக வெட்டினர்.இதில் ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடத்த அவரை மீட்டு அருகில் […]
