அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகில் அரியகோஷ்டி கிராமத்தில் வசித்து வந்தவர் ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் பிரகாஷ் என்ற சிவப்பிரகாசம்(47). இவருக்கு சுகுணா(33) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளார்கள். சிவப்பிரகாசம் கடந்த 7ஆம் தேதி மாலை பரங்கிப்பேட்டை அப்பாசாமி தெருவில் வசித்த முத்துக்குமரன் என்பவருடன் பைக்கில் சிதம்பரம் நோக்கி சென்றார். பைக்கை சிவப்பிரகாசம் ஓட்டி சென்றுள்ளார். அப்போது முட்லூர் – […]
