முன்னாள் ராணுவ வீரர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆசிலாபுரம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முன்னாள் ராணுவ வீரரான சுப்புராம்(51) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சுப்புராமின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். நேற்று சுப்புராம் வீட்டிற்குள் இறந்து கிடப்பதாக பெருமாளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி பெருமாள் அங்கு சென்று பார்த்த போது தனது […]
