அரசு வேலை வாங்கித் தருவதாக, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர், 65 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். சேலம் மாவட்டம் ஜான்சன் பேட்டை கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி. இவர் நேற்று சேலம் போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோதாவிடம் புகார் ஒன்றை அளித்தார். இந்த புகாரில். “நான் கோரைப்பாய் உற்பத்தி மற்றும் விற்பனை செய்து வருகிறேன். இதற்கிடையில் 2011 முதல் 2016 வரை அதிமுக ஆட்சியில் நலத்துறை அமைச்சராக இருந்த சுப்பிரமணியத்துடன் எனக்கு தொடர்பு கிடைத்தது. அவர் […]
