கனடாவின் பொதுத் தேர்தல் வரும் 20-ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே மக்கள் வாக்களித்து வருகிறார்கள். கனடா நாட்டின் பொதுத்தேர்தலில், மக்களின் வசதிக்காக முன்பாகவே வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த வாய்ப்பானது, வெள்ளிக் கிழமையிலிருந்து வழங்கப்பட்டது. அன்று ஒரே நாளில் மொத்தமாக 1.3 மில்லியன் மக்கள் வாக்களித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வாய்ப்பினை இன்று இரவு 9 மணி வரை மக்கள் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் வருடம் நடந்த பொதுத்தேர்தலில், பதிவான […]
