தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க உள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும். இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முதல் மழையானது, 15ஆம் தேதி அந்தமானில் பெய்கிறது. அதைத் தொடர்ந்து தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் 15ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. […]
