சென்னையில் மழை நீர் தேங்குவதை தடுப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், பேரிடர்களை எதிர்கொள்ளும் திறன் இந்த அரசுக்கு இருப்பதாக தெரிவித்தார். சென்னையில் வெள்ள நீர் தேங்குவதை தடுப்பது குறித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான 18 பேர் கொண்ட குழுவுடன் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்தாய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், வரலாறு காணாத மழை பெய்தாலும், அதனால் ஏற்பட்ட பாதிப்பு குறைவாக இருப்பதற்கு தடுப்பு […]
