சென்னையில் நாளை 70 பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என மாநகராட்சி அலுவலர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு வரும் 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தது. மாணவர்கள் பெற்றோரின் எழுத்துப்பூர்வமான அனுமதி கடிதத்தைப் பெற்று தான் பள்ளிக்கு வரவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நாளை சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் 38 உயர்நிலைப் பள்ளிகளும், 32 மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய கல்வி அலுவலர் முனியன் […]
