தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு டிசம்பர் 5ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும். இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.. குறிப்பாக இவ் விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு நிகழ்வுக்கு மட்டும் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள். இந்நிலையில் திருவாரூர் ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு […]
