புதுக்கோட்டை நீதிமன்றத்தில் 75 வழக்குகளில் கலர் ஜெராக்ஸ் எடுத்து போலி முத்திரைத்தாள்கள் சமர்ப்பித்து மோசடி நடைபெற்றது குறித்து மாவட்ட நீதிமன்றம் நிர்வாக அதிகாரி காவல்துறையிடம் புகார் அளித்தார். நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும்போது வழக்கறிஞர்கள் நீதிமன்ற சிலுடன் கூடிய முத்திரைதாள் மூலமாக வழக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் கடந்த வருடம் 75 வழக்குகளில் முத்திரைத்தாள்கள் போலியாக ஜெராக்ஸ் கொடுத்து நீதிமன்ற சிலுடன் வழக்கு தாக்கல் செய்திருப்பது தெரியவந்தது. இதன்முலம் 27 லட்சத்து […]
