சார்நிலை கருவூலக அலுவலர்கள் முத்திரைத்தாளை அரசு இடமிருந்து கேட்டு பெற வேண்டுமென வக்கீல் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரத்தில் கூடுதல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் உள்ளிட்ட 4 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்குக்கு தகுந்தவாறு முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும். இந்நிலையில் நீதிமன்ற முத்திரைத்தாள் தாராபுரம் சார்நிலை கருவூலகத்தில் பொதுமக்கள் கேட்டால் விற்பனை செய்வது இல்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு சார்நிலை கருவூலகத்தில் கிடைக்கக்கூடிய […]
