திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன்,கடந்த முறை அண்ணா திமுக தான் ஆட்சியில் இருந்தது. எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சராகவும் இருந்தார். அந்த ஆளுநர் இப்போது பஞ்சாப் மாநிலத்தில் ஆளுநராக இருக்கிறார். இங்க இருந்து குடைச்சல் கொடுத்துட்டு, இப்ப நேர அங்க குடைச்சல் கொடுக்க போயிட்டார். யாருமே ஆளுநர் கிடையாது, எல்லாருமே குடைச்சல் கொடுப்பவர்கள் தான். […]
