விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசியார்பட்டி பகுதியில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார், துள்ளுக்குட்டி, பிரகதீஸ்வர், பொன்ரமணன் போன்றோர் கள ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் கல் திட்டை, முது மக்கள் தாழிகள் மற்றும் குத்துக்கல் போன்றவற்றை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது அரசியார்பட்டியில் செம்மண் நிலம் மேற்பரப்பில் புதைந்த நிலையில் சிறு அளவிலான 3 முது மக்கள் தாழிகள் இருக்கின்றன. அதில் ஒரு தாழி வாய்ப்பகுதியின் விட்டம் 43 செ.மீ.இருக்கிறது. இதையடுத்து மேற்பகுதி […]
