தமிழகத்தில் கொரோனா தொற்றின் முதல் மற்றும் 2-வது அலைகளின் பாதிப்பு காரணமாக அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. இதன் காரணமாக அரசு பணிக்காக காத்திருக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து 2 ஆண்டுகளாக போட்டித் தேர்வுகள் நடத்தி பணி நியமனம் செய்யப்படாத காரணத்தால் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நடத்தப்படும் தேர்வுகளின் மூலம் தமிழக ஆசிரியர்கள் தகுதி வாரியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். […]
