உலக சுகாதார நிறுவனம் முதியோரை பாதுகாக்கும் உணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 15ஆம் தேதி முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினமாக அனுசரித்து வருகிறது. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று சமூக நலத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான இடங்களில் முதியவர்களுக்கு எதிராக பல்வேறு கொடுஞ்செயல்கள் அரங்கேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
