கொண்டலாம்பட்டி அருகில் நிலப் பிரச்சனை காரணமாக செல்போன் டவரில் ஏறி நின்று முதியவர் போராட்டம் நடத்தினார். சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி அருகில் பெரியபுத்தூர் சக்தி கோவில் வடடத்தில் வசித்து வருபவர் சகாதேவன்(65). இவர் அந்தப் பகுதியில் உள்ள கரடு புறம்போக்கு நிலத்தின் அருகில் 40 வருடங்களுக்கு மேல் வசித்து வருகின்றார். சகாதேவன் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகின்றார். இவர் குடியிருந்து வந்த இடத்தின் அருகில் பெருமாள் கோவில் இருக்கிறது. இந்த கோவில் சகாதேவனின் முன்னோர்கள் வைத்தது. […]
