6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள மொளசி பகுதியில் வெங்கடாஜலம் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதற்குப்பின் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு சென்ற பக்கத்து வீட்டு பெண் உடனடியாக சிறுமியை மீட்டு […]
