சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் ஆசிரியர் நகர் பகுதியில் செல்வராஜ்(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் வணிக வளாக உரிமையாளர் ஆவார். இந்நிலையில் செல்வராஜ் அதே பகுதியில் வசிக்கும் 6 மற்றும் 15 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமிகளின் பெற்றோர் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]
