முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று 60 வயது மதிக்கத்தக்க முதியவர் சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென அந்த முதியவர் தான் மறைத்து கொண்டு வந்த மண்ணெண்ணெயை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த போலீசார் முதியவரிடம் இருந்து மண்ணெண்ணெய் கேனை பறித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் முதியவர் கூறியதாவது, எனது பெயர் சிகாமணி. நான் பண்ருட்டி கீழ்மாம்பட்டை பகுதியில் வசித்து வருகிறேன். பிரதம மந்திரி […]
