சாலையோரம் உறங்கிக்கொண்டிருந்த முதியவர் தீயில் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதுடைய சந்திரன்.இவர் கூலித் தொழில் செய்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மற்றும் மகளுடன் ஏற்பட்ட பிரச்சனையில் வீட்டில் இருந்து வெளியேறி தனது சொந்த உழைப்பில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் சந்திரனின் உடல் கருகிய நிலையில் இருளப்பபுரம் பகுதியில் ஒரு வீட்டின் வாசலில் மர்மமான முறையில் இறந்து […]
