முதியவர்கள் வீட்டில் இருந்தபடியே புகார் அளிக்கலாம் என போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தினமும் புகார் அளிப்பதற்காக ஏராளமானோர் வருகின்றனர். இதில் குறிப்பாக 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் அதிகம் வருகின்றனர். நான் புதிய போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்ற நாளில் இருந்து இதுவரை 424 மனுக்கள் வந்துள்ளது. இந்த மனுக்கள் 4 வகையாக பிரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட காவல் […]
