தேனீக்கள் கொட்டியதால் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நவம்பட்டு பகுதியில் விவசாயியான மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனக்கு சொந்தமான மாடுகளை விவசாய நிலத்தில் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பனை மரத்திலிருந்த தேனீக்கள் மணியை கொட்டியுள்ளது. இதில் மணி நிலைதடுமாறி கீழே மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் மணியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர […]
