ஆட்டோ மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை அருகே காஞ்சாம்புரம் சரல் பகுதியில் தாசைய்யன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகாததால் மாம்பழஞ்சி பகுதியில் இருக்கும் தம்பி மகள் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தாசைய்யன் குளிப்பதற்காக விரிவிளை பகுதியில் இருக்கும் ஆற்றிற்கு சென்றுள்ளார். இவர் ஆற்றில் குளித்து விட்டு திரும்பி வரும் வழியில் அவ்வழியே வேகமாக வந்த ஆட்டோ ஒன்று தாசைய்யன் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் […]
