சட்டசபையை கூட்ட எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் அசோக் கெலாட்க்கு தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையில் மனக்கசப்பால் மோதல் உருவாகியுள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டது மட்டுமில்லாமல், சபாநாயகர் பைலட் உட்பட 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் கட்சிக்கு விரோதமாக செயலாற்றியதாக நோட்டீஸ் அனுப்பினார். சபாநாயகரின் நோட்டீஸை எதிர்க்கும் விதத்தில் சச்சின் பைலட் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார். […]
