இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த குழந்தைகள் தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. இவர் குழந்தைகள் மீது அதிக அன்பும், பற்றும் வைத்திருந்தார். அதோடு குழந்தைகள் தான் நம் நாட்டின் வலிமை என்றும், ஒரு சமூகத்தினுடைய வலிமையின் அடித்தளம் என்றும் கூறினார். ஜவர்கலால் நேரு மீது குழந்தைகளும் அதிக அன்பு கொண்டிருந்ததால் அவரை அன்பாக நேரு மாமா […]
