இலங்கை அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டி லக்னோவில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது . இதில் அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 56 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சர் என 89 ரன்கள் […]
