ஈரான் நாட்டின் முதல் ஜனாதிபதியான Abolhassan Banisadr, பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீசில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Abolhassan-ன் குடும்பத்தினர் இது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில் Abolhassan Banisadr பல நாட்களாக, உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் பாரிஸில் இருக்கும் மருத்துவமனையில் காலமானதாக தெரிவித்திருக்கிறார்கள். இவர் நாட்டில் முடியாட்சி ஒழிக்கப்பட்ட பின்பு இடைக்கால ஆட்சி அமைக்கப்பட்டபோது வெளியுறவு அமைச்சராக பணிபுரிந்தார். கடந்த 1979-ஆம் ஆண்டில் இஸ்லாமிய புரட்சிக்குப் பின் நாட்டின் முதல் ஜனாதிபதியாக பதவியேற்றார். […]
