மதுரை மாவட்டம் திருவேங்கடம் கிராமத்தை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி செல்வி ஷோபனா கல்லூரி படிப்பிற்கு தனக்கு பணம் வசதி இல்லாமல் ஏழ்மை நிலையில் உள்ளதாக தமிழக முதல்வருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இக்கடிதத்தை கனிவுடன் பரிசீலித்த தமிழக முதல்வர் மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் அம்மாணவி பிபிஏ பட்டப்படிப்பு படிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளார். முதல்வர் தாய் உள்ளத்துடன் செய்த உதவிக்கு சென்னையில் நேரில் வந்து சந்தித்து நன்றி தெரிவிக்கும் […]
