Categories
மாநில செய்திகள்

பெண்களுக்கு மாதம் ரூ.1,000…… முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு……!!!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். இருப்பினும் ஆட்சி அமைத்து ஒரு வருடங்கள் ஆகியும் இது குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இதனால் குடும்பத் தலைவிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வருகின்ற 19-ஆம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு விலக்கு…. மீண்டும் செக் வைக்க தமிழக ஆளுநர்…. ஷாக்கான ஸ்டாலின்….!!!!

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 8-ஆம் தேதி மீண்டும் நீட் தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும் அந்த நீட் விலக்கு மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தமுறை காலதாமதம் செய்யாமல் ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு நீட் விலக்கு மசோதாவை அனுப்பி வைப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் திமுகவின் எதிர்பார்ப்புக்கு மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி செக் வைப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ஆளுநர் ஒரு சட்ட […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்!…. இனி ஒரு பைசா கூட வாங்க கூடாது…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இனி ஒரு பைசா வாங்கினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் நெல்கொள்முதல் தொடர்பாக புகார் ஏதுமிருந்தால் 18005993540 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அதேபோல் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் தன்னிடம் அறிவுறுத்தியதாகவும் அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

216 அடி உயர ராமானுஜர் சிலை திறப்பு…. வாழ்த்து சொன்ன ஸ்டாலின்….!!!!!

ஸ்ரீ ராமானுஜரின் 216 அடி உயர சமத்துவத்திற்கான சிலை ஹைதராபாத் முச்சிந்தல் பகுதியிலுள்ள திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகளின் ஆசிரம வளாகத்தில் 45 ஏக்கரில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2ஆம் தேதி முதல் வருகிற 14ஆம் தேதி வரை இங்கு லட்சுமி நாராயண யாகம் நடைபெறும். வேத மின்னணு நூலகம், ஆராய்ச்சி மையம்,  ஸ்ரீ ராமானுஜரின் பல்வேறு படைப்புகளை விவரிக்கும்  கல்விக் கூடம் போன்றவையும் இந்த வளாகத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த சிலை ஸ்ரீ ராமானுஜாச்சார்யா […]

Categories
சினிமா

முதல்வரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்த தயாரிப்பாளர்… யார் தெரியுமா…?

சினிமா தயாரிப்பாளர் அன்புசெழியன், தன் மகள் திருமணத்திற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார். திரைப்பட தயாரிப்பாளர், பைனான்சியர், திரையரங்கின் உரிமையாளர், விநியோகஸ்தர் என்று பல்வேறு துறைகளில் பிரபலமடைந்திருக்கும் அன்புச்செழியனின் மகள் சுஷ்மிதாவிற்கு வரும் பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதியன்று சென்னையில் இருக்கும் திருவான்மியூரில் இருக்கும் ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் திருமணம் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், அன்புச்செழியன் இன்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏ-வான நடிகர் உதயநிதி ஸ்டாலின் இருவரையும் நேரில் […]

Categories
அரசியல்

காங்கிரஸிற்கு தகுந்த வார்டுகளை கொடுங்கள்…. மாவட்ட செயலாளர்களிடம் கூறிய ஸ்டாலின்…!!!

முதல்வர் மு க ஸ்டாலின் திமுகவின் மாவட்ட செயலாளர்களிடம் காங்கிரசுக்கு தகுந்த பிரதிநிதித்துவம் கிடைக்கும் விதத்தில் வார்டுகளை ஒதுக்கி தர வேண்டும் என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டிருக்கிறது. தி.மு.கவின் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, அதிக தொகுதிகளை கேட்டுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் மொத்தம் இருக்கக்கூடிய 200 வார்டுகளில் 40 வார்டுகளை கேட்பதற்கு காங்கிரஸ் முடிவெடுத்தது. அதற்காக முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. எனினும், தற்போதுவரை […]

Categories
அரசியல்

“கன்னியாகுமரிக்கு விடிவு காலம்!”…. முதல்வர் உத்தரவாதம்…. மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் காங்கிரஸ்….!!!!

சட்டசபை காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வழங்கியுள்ளார். அந்த மனுவில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி-களியக்காவிளை இடையிலான 55 கிலோ மீட்டர் சாலை மற்றும் காவல்கிணறு-பார்வதிபுரம் வரையிலான 22 கிலோ மீட்டர் சாலைகள் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி அரசு அந்த சாலையை சீரமைக்க வேண்டும். கிளியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மக்கள் பயன்பெறும் வகையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது தெரியுமா?…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேரடி வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்னும் இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டாலினுக்கு முதலில் வைக்க இருந்த பெயர் என்ன தெரியுமா?…. சுவாரஸ்சிய தகவல் இதோ….!!

ஸ்டாலின் என்று தனக்குப் பெயர் வைத்தது எப்படி என்பது குறித்த சுவாரஸ்சிய தகவல்களை தமிழக முதல்வர் பகிர்ந்துள்ளார். தமிழ் திரைப்பட நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளில் ஒருவர் பூச்சி முருகன். இவருடைய இல்லத் திருமணமானது இன்று நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார். அந்த உரையில் அவர் கூறியதாவது “உங்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களுக்கு பிறக்கின்ற குழந்தைக்கு நல்ல தமிழ் பெயரை சூட்டுங்கள். உங்களுக்கு ஒரு சந்தேகம் […]

Categories
மாநில செய்திகள்

ஜான்சிராணி வால் வீசுறதுக்கு முன்பே….. “ஆங்கிலேயர்களை எதிர்த்து”…. நாட்டை வென்ற ஒரே ராணி வீரத்தாய் வேலுநாச்சியார்… முதல்வர் ஸ்டாலின்..!!

இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திற்கும் சற்றும் சளைக்காத வகையில் விடுதலைப் போரில் தமிழகம் செய்த 250 ஆண்டுகால தொடர் பங்களிப்பு சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமானதாகும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் பங்கு பெறவிருந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், பாரதியார் உருவங்கள் அடங்கிய  அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது. வ.உ.சி, வேலுநாச்சியார் ஆகியோர்கள் தேசிய அளவில் பிரபலமான சுதந்திர போராட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய சாலைகள் அமைத்தால்…. முதல்வர் ஸ்டாலின் திடீர் உத்தரவு….!!!!

தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் சென்னையில் தேனாம்பேட்டை, வாரன்ஸ் சாலை மற்றும்மகாலிங்கபுரம் சாலைகளில் நடந்து வந்த சாலை பணிகளை நேற்று சோதனை மேற்கொண்டார் . இவ்வாறு நேற்று இரவு திடீரென்று சாலை பணிகளை பார்வையிட வந்த முதல்வர் ஸ்டாலின் அங்கு இருந்த அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது சாலைகளை அகழ்ந்தெடுக்கும் பணிகள் நடந்து கொண்டு இருந்தன. இதை நேரில் பார்வையிட்ட ஸ்டாலின் சாலையின் தரம் பற்றி கேட்டறிந்தார். இந்நிலையில் சென்னையில் பழைய சாலைகளை தோண்டாமல் புதிய சாலைகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு…. சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்திலும் ஜனவரி 10-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு மேலும் நீடிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி […]

Categories
அரசியல்

நா சொன்ன அறிவுரையயும் கேட்டுருக்கீங்க…. எனக்கு ரொம்ப சந்தோஷம்…. முதல்வரை பாராட்டிய ஜெயக்குமார்….!!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முதல்வர் மு.க. ஸ்டாலின் தன் அறிவுரையை ஏற்றதற்கு மகிழ்ச்சி என்று கூறியிருக்கிறார்.  தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்காக மளிகை பொருட்கள், கரும்பு மற்றும் வேட்டி சட்டை, போன்றவற்றை மக்களுக்கு கொடுத்து வருகிறது. அதில், பொங்கல் பொருட்கள் குறைவாக உள்ளது எனவும் அதற்கு பை கொடுப்பதில்லை என்றும் மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் பை தைப்பதற்கு தாமதமாகிறது என்று முதலமைச்சர் விளக்கம் அளித்திருக்கிறார். இந்நிலையில், அ.தி.மு.க. வின் முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு?…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணியளவில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் பொங்கல் மற்றும் அதனை சார்ந்த பண்டிகைகள் தொடர்ச்சியாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சனி, ஞாயிறு முழு ஊரடங்கு?…. முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் பிற்பகல் 12 மணியளவில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் பொங்கல் மற்றும் அதனை சார்ந்த பண்டிகைகள் தொடர்ச்சியாக […]

Categories
அரசியல்

இதையெல்லா செஞ்சது யாரு….? அடுக்கடுக்கா கேள்வி எழுப்பி….. எதிர்கட்சியினரின் வாயை அடைத்த ஸ்டாலின்…..!!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் கலைஞரின் எந்த திட்டங்களையெல்லாம் அதிமுக அரசு நீக்கியது எனது பற்றி அடுக்கடுக்காக கேள்வி கேட்டிருக்கிறார். சட்டப்பேரவையில், அம்மா மினி கிளிக்குகள் மற்றும் அம்மா உணவகத்தை கவனிக்காதது  தொடர்பில் எதிர்க்கட்சியினர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், அம்மா உணவகத்தை சரியாக கவனிக்கவில்லை என்று எதிர்க்கட்சித்தலைவர்கள் கூறுகிறார்கள். அவ்வாறான பட்டியல்களை வாசிக்க வேண்டும், எனில் என்னிடம் அது நிறைய இருக்கிறது என்று கூறியிருக்கிறார். […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: முதல்வர் தலைமையில் 17 பேர் கொண்ட குழு அமைப்பு…. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் திமுக தலைமையிலான முதல்வர் ஸ்டாலின் அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் கோவில்களில் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்தவும், பராமரிப்பை செம்மைப்படுத்தவும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் 17 பேர் இடம் பெற்றுள்ளனர். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சுகி சிவம், சத்தியவேல் முருகனார், தேச மங்கையர்க்கரசி உட்பட 17 பேர் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.குழுவின் […]

Categories
அரசியல்

எல்லா கட்டுப்பாடும் சரி தான்….! டாஸ்மாக்கை மட்டும் ஏன் மூடல….? சரமாரியாக கேள்வி எழுப்பும் டிடிவி…..!!!

அமமுக பொது செயலாளரான டிடிவி தினகரன், தமிழகத்தில் கொரோனா காரணமாக பல விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியிருக்கும் முதல்வர் ஸ்டாலின் டாஸ்மாக்கை அடைக்காததற்கு என்ன காரணம்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். தமிழ்நாட்டில் கொரோனா தீவிரத்தை குறைக்க பல புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், நாளையிலிருந்து நாடு முழுக்க இரவு நேரத்தில் ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை இணையதள வகுப்புகள், மருத்துவம் தவிர கல்லூரிகள் அனைத்திற்கும் இம்மாதம் 20ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் ஊரடங்கு அமல்…. எதற்கெல்லாம் தடை?…. எதற்கெல்லாம் அனுமதி?…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி  தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் உள்ள மூன்றாவது மாடியில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த வருடத்தின் முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். அவரது உரையில் புதிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடரில் மகளிருக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்றத் தேர்தலின் போது திமுகவின் […]

Categories
மாநில செய்திகள்

மதுரையில் பிரம்மாண்ட கலைஞர் நூலகம்…. ஜனவரி 12-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்….!!!!

மதுரையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பெயரில் பிரம்மாண்டமான நூலகம் அமைய உள்ளது. இந்த நூலகத்தில் 250 கார்கள் நிறுத்தும் வகையில் கீழ்த்தளம் அமைக்கப்டுகிறது. நூலக வளாகத்தில் 300 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தும் வசதி செய்யப்படுகிறது. அதன்மேல் தரைத்தளம் மற்றும் 6 மாடிகள் உள்பட 7 மாடிகளுடன் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் நூலகம் கட்டப்படுகிறது. மின்சார பயன்பாடு குறைவு உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில் நுட்பத்துடன் இந்த கட்டிடம் 12 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும் இரவு நேர ஊரடங்கு?…. இன்று முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக […]

Categories
அரசியல்

“தலைவா நீ வேற ரகம்!”…. ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய அ.தி.மு.க அமைச்சர்….!!!!

நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசியுள்ளார். அதாவது பிரதமர் மோடி தமிழ் கலாச்சாரம் மற்றும் பெருமைகள் குறித்து தொடர்ந்து பேசி வருவதாகவும், புறநானூறு, திருக்குறள் போன்றவற்றை உலகறிய செய்யும் வகையில் ஐ.நா. சபை வரை எடுத்துச்சென்று தமிழ் பெருமையை பறைசாற்றி வருகிறார் என்று கூறியுள்ளார். மேலும் பிரதமர் மோடி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரைக்கு வருகை தர இருப்பது தமிழக மக்களுக்கு அளவற்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நான் மனுநீதி சோழன் அல்ல…. மனு வாங்கும் சோழன்”…. முதல்வர் ஸ்டாலின் தற்பெருமை….!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள தாயனூர் கேர் கல்லூரியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின், திருச்சி மாவட்டத்தில் அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 78,582 கோரிக்கை மனுக்களை மக்களிடமிருந்து பெற்றுள்ளனர். அதில் 45,088 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மற்ற மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்று வருகிறது. அதில் தகுதியுள்ள மனுக்கள் […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: யாரும் என்னை பார்க்க வர வேண்டாம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!!

புத்தாண்டு அன்று கட்சி தலைவர்கள் தன்னை நேரில் சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில். தமிழக மக்களின் பேராதரவுடன் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வருகிற முதல் ஆங்கிலப் புத்தாண்டான ஜனவரி 1 ஆம் நாளில் அந்த வெற்றிக்காக அயராது பாடுபட்ட கட்சி நிர்வாகிகள், உடன் பிறப்புகள் பலரும் என்னை நேரில் வந்து சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தை என்னால் உணர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து….!!!!

புத்தாண்டு என்பது உலகம் முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படும் தருணமாகும். உலகத்தில் அனைவருக்கும் பொதுவான முக்கியமான விழாக்களில் ஒன்றாக புத்தாண்டு விளங்குகிறது. நம் நாட்டில் புத்தாண்டு சாதாரணமாக கொண்டாடப்பட்டாலும், பல நாடுகளில் புத்தாண்டு என்பது ஒரு பாரம்பரிய விழாவாக கருதப்படுகிறது. அந்த வகையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான, மு.க ஸ்டாலின் தொண்டர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தன்னை நேரில் சந்திப்பதை தவிர்க்குமாறும், கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடிக்கு…. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்….!!!

பருவமழை பாதிப்புகளில் இருந்து மீள விரைவில் நிதி ஒதுக்கிட வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் “தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் வரலாறு காணாத மழை பெய்த சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு விரைவாக நிவாரண பணிகளை மேற்கொண்டு இயல்பு நிலையை மீட்டெடுத்தது. பெருமழையினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக, மத்திய குழுவினர் 21-ம் தேதி அன்று தமிழ்நாட்டில் ஆய்வு மேற்கொண்டதை குறிப்பிட்டு தமிழ்நாட்டில் […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: பொங்கல் பரிசு ரூ.3000…. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு ….!!!

தமிழ்நாடு அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி முதல்வர் முக ஸ்டாலின் சற்று நேரத்திற்கு முன்பாக அறிவித்துள்ளார். அதன்படி சி டி பிரிவு அரசு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு 1000 வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வு, பொங்கல் போனஸ் வழங்க ரூபாய் 8894 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வரும் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில்…. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு….!!!!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வர் முக ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு ஒமைக்ரான் சிகிச்சை மையம் மற்றும் படுக்கைகளில் நிலவரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும், ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் அவர் பார்வையிட்டார். ஒமைக்ரான் வைரஸ் பாதித்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை, தொற்றை எதிர்கொள்ள அங்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் ஆகியவற்றை குறித்தும் மருத்துவத் துறை அதிகாரிகளிடம் ஸ்டாலின் கேட்டறிந்தார். […]

Categories
அரசியல்

முதல்வர் ஸ்டாலினை தடுப்பது யார்?…. எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் சரமாரி கேள்வி….!!!!

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக 50,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. இந்த நிதியை வழங்குவதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது. மாநில அரசுகள், மத்திய அரசு ஒதுக்கும் நிதியை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒரு பங்கும் சேர்த்து இறந்தவர்களின் […]

Categories
மாநில செய்திகள்

“அனைவரும் கூட்டம் கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்”…. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்….!!!

பொதுமக்கள் அனைவரும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பேசிய முதல்வர் முக ஸ்டாலின் இரவு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என்றும், ஒமைக்ரான் பரவல் 10% இருக்கும் பட்சத்தில் ஊரடங்கு அறிவிப்பது குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் பொது மக்கள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார். தடுப்பூசி […]

Categories
மாநில செய்திகள்

மஞ்சப் பை அவமானம் இல்லை…. அடையாளம்…. சுற்றுச்சூழலுக்கு சரியானது…. முதல்வர் மு.க ஸ்டாலின்..!!

மஞ்சப்பை வைத்திருந்தால் பட்டிக்காட்டான் என கிண்டலாக பேசி வந்தனர். ஆனால், மஞ்சப்பை தான் சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.. சென்னை கலைவாணர் அரங்கத்தில் ‘மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.. அதன்பின் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘மீண்டும் மஞ்சள் பை’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதிலே நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன்.. மஞ்சள் பை கொண்டு வந்தால் வீட்டில் ஏதேனும் விசேஷமா.. பத்திரிக்கை கொண்டு வந்திருக்குறீர்களா […]

Categories
அரசியல்

300 வாக்குறுதிகள் நிறைவேற்றம்…. முதல்வர் ஸ்டாலின் செம கெத்து…!!!!

சென்னை பெரம்பூரில் நடைபெற்று வரும் கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், நான் அதிகம் பேசுவதில்லை. முதலமைச்சராக தொடர்ந்து செயலில் காட்டுவேன். தற்போது பேசியவர்கள், அளித்த பாராட்டுகள் 5 ஆண்டுகளுக்குப் பிறகும் எனது உழைப்புக்கு கிடைக்க வேண்டும். தட்டுங்கள் திறக்கப்படும் என்பார்கள். தட்டாமலேயே இங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தேர்தலில் கொடுத்த 500 வாக்குறுதிகளில் 300-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பொங்கல், கிருஸ்துமஸ், ரம்ஜான் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் கொடுத்த க்ரீன் சிக்னல்…. குஷியோ குஷியில் செவிலியர்கள்….!!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அளித்த தகவலால் ஒட்டுமொத்த செவிலியர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விருதுநகரில் மத்திய அரசு 60 சதவீதம் பங்களிப்பு, மாநில அரசு 40% பங்களிப்புடன் 390 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவ கல்லூரியை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் புதிய […]

Categories
அரசியல்

பதவியில் இருந்து தூக்கிருவேன்…. முதல்வர் கொடுத்த கடைசி வார்னிங்…. அரண்டு போன அமைச்சர்கள்….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தன் மீதும் தன் ஆட்சியின் மீதும் எந்தவித கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்பதில் ஆரம்பத்திலிருந்தே மிக கவனத்துடன் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் ஆட்சி அமைந்து 6 மாதங்கள் முடிவடைந்த நிலையில் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருந்த அமைச்சர்கள் மீதான பிடியை ஸ்டாலின் தற்போது இறங்கியுள்ளதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, அமைச்சர்களின் நடவடிக்கைகள் பொறுப்பு ஏற்றதில் இருந்து செயலாற்றும் விதம் என்பன உள்ளிட்ட உளவுத்துறையின் ரிப்போர்ட், உட்பட பலரிடமும் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

55 மீனவர்களை விடுவிக்க வேண்டும்….. மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்….!!!!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சிறைபிடிக்கப்பட்ட நிலையில்,  இன்று மேலும் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதுவரை மொத்தம் 55 தமிழக மீனவர்களை கைது செய்துள்ள நிலையில் 12 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததை […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்கள் இல்லையென்றால்…. அரசாங்கமே இல்லை…. முதல்வர் பேச்சு…!!!!

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ஆம் மாநில மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் முக ஸ்டாலின் தற்போது உரையாற்றி வருகிறார். அதில், “அரசு ஊழியர்களுக்கு அதிகளவிலான சலுகைகளை வழங்கியது திமுக அரசு தான். நான் உங்களில் ஒருவனாக இருப்பேன். நீங்கள் அரசு ஊழியர்கள், நான் மக்கள் ஊழியன்.  அரசு ஊழியர்கள் இல்லை என்றால் அரசாங்கமே இல்லை. அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு கருணை நிதி வழங்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆங்கிலத்தில் Do Or Die என்ற ஒரு […]

Categories
மாநில செய்திகள்

“கனவை நனவாக்க வேண்டும்”…. முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை….!!!

நடுத்தர மக்களின் கனவுகளை நனவாக்க நீங்கள் சிந்திக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கட்டுமானத் தொழிலில் இருப்பவர்களுக்கு பயன்படக்கூடிய வகையில் தமிழ்நாடு கிரெடாய் அமைப்பினுடைய இரண்டு நாள் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டினை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “கட்டுமான தொழில் என்பது மக்களோடு இணைந்து இருக்கக்கூடிய ஒரு தொழில். வேளாண் துறைக்கு அடுத்தபடியாக அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பை தருகின்ற தொழில் இந்த கட்டுமான தொழில். […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING : ஊரடங்கு அமல்….. முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை…. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!

வரும் டிசம்பர் 13ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்புக்கு சென்று வருகின்றன. ஆனால் தற்போது உலக நாடுகள் முழுவதும் ஒமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

இனிமேல் என்ன கவலை ? ஸ்டாலினின் சூப்பர் முடிவு…! பெண்களுக்கு செம பாதுகாப்பு…!

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 நவீன விழிப்புணர்வு வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு வாகனங்களை தொடங்கி வைத்தார். சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒலி ஒளி காட்சிகளை திரையிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 2 காவல்துறை விழிப்புணர்வு வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. அனைத்து மாவட்டங்களிலும், பொதுமக்களுக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முன்கள பணியாளராக…. நானும் களத்தில் நிற்கிறேன்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

சென்னையில் மழை நீர் தேங்குவதை தடுப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், பேரிடர்களை எதிர்கொள்ளும் திறன் இந்த அரசுக்கு இருப்பதாக தெரிவித்தார். சென்னையில் வெள்ள நீர் தேங்குவதை தடுப்பது குறித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான 18 பேர் கொண்ட குழுவுடன் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்தாய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், வரலாறு காணாத மழை பெய்தாலும், அதனால் ஏற்பட்ட பாதிப்பு குறைவாக இருப்பதற்கு தடுப்பு […]

Categories
மாநில செய்திகள்

இது வேற மாறி…. மீண்டும் கோட்டைக்குச் செல்லும் முதல்வர் ஸ்டாலின்…. புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதில் ஒரு பகுதியாக தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. கடந்த அதிமுக ஆட்சியில் கடைசி நிதிநிலை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. அதன் பிறகு புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு, எம்எல்ஏக்கள் பதவியேற்பு, சபாநாயகர் தேர்வு, ஆளுநர் உரை, நிதிநிலை அறிக்கை, வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் மற்றும் மானியக் கோரிக்கை மீதான விவாதம் உள்ளிட்ட சட்டப் பேரவைக் கூட்டத் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி…. நேரில் ஆய்வு மேற்கொள்ளும் முதல்வர்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை இன்று முதல்வர் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல மாவட்டங்கள் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது. இந்நிலையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தற்கொலை தாக்குதல் நடத்துவேன்….. கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகிக்கு ஜாமீன்….!!!

பெட்ரோல் விலையை இன்னும் ஒரு வாரத்தில் குறைக்கவில்லை என்றால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவத போவதாக  பேசியதால் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாஜக ஓபிசி அணியின் மாநில துணைத் தலைவர் அகோரம் மாநில அரசு பெட்ரோல் டீசல் விலையை இன்னும் ஒரு வாரத்தில் குறைக்க வில்லை எனில் பாஜக தலைவர் அண்ணாமலையின் ஆணைக்கிணங்க தற்கொலை படை தாக்குதல் நடத்த […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த ரெய்டு…. ஹிட் லிஸ்டில் சிக்கிய 3 பேர்…. முதல்வர் ஸ்டாலின் எடுத்த பைல்….!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர் விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி, கே.சி வீரமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது. இதற்கு அடுத்ததாக யார் சிக்குவார்கள் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத் துறையிடம் திமுக அளித்த புகார் தொடர்பாக அந்த கட்சியின் அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சில நாட்களுக்கு முன்பே லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அரசு புறம்போக்கு நிலம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் – கேரளா பொது போக்குவரத்துக்கு அனுமதி…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்துக் கொண்டே வருகிறது. அதன்படி தற்போது தளர்வுகளுடன் கூடிய அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். தற்போது ஒமைக்ரான் வகை கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு… டிசம்பர் 15 வரை நீட்டிப்பு…. முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்துக் கொண்டே வருகிறது. அதன்படி தற்போது தளர்வுகளுடன் கூடிய அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். தற்போது ஒமைக்ரான் வகை கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

ஆயிரக்கணக்கானோர் வேலையிழக்கும் ஆபத்து…. திடீரென கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்….!!!!

ஜவுளித் தொழிலை பாதுகாக்கவும், ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழப்பதை தடுக்கவும்,இந்தியாவில் நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் மத்திய ஜவுளித் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த சில மாதங்களாக நூல் விலை உயர்ந்து வருவதால் திருப்பூரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து நூல் விலையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், நாட்டின் ஜவுளி வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கை தமிழ்நாடு உள்ளடக்கியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு…. சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின்….!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்துக் கொண்டே வருகிறது. அதன்படி தற்போது தளர்வுகளுடன் கூடிய அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். தற்போது ஒமைக்ரான் வகை […]

Categories
மாநில செய்திகள்

பாலியல் குற்றங்களை தடுப்பது எப்படி? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை….!!!!

பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது மற்றும் போக்சோ சிறப்பு நீதிமன்றம் அமைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முக. ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பள்ளிக் கல்வி, சமூக நலன் மற்றும் காவல் ஆகிய துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பள்ளி மாணவிகளுக்கு எதிரான குற்றங்கள் […]

Categories

Tech |