தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு மற்றும் ஐக்கியஅரபு நாடுகளிடையே பொருளாதார, வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் அடிப்படையிலும், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் துபாய் மற்றும் அபுதாபிக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் துபாய் பயணத்தினை முடித்துக்கொண்டு அபுதாபிக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் மார்ச் 28 (நேற்று) பல நிகழ்வுகளில் பங்கேற்றார். இதையடுத்து ஐக்கியஅரபு நாடுகளைச் சேர்ந்த அபுதாபி முபாதாலா கோபுரத்தில் உள்ள எமிரேட்ஸ் பேலசில் முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை அவர் சந்தித்தார். […]
