தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என் ரவி அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டது தற்போது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விதமான சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. தமிழக ஆளுநர் ரவி அவர்கள் பாஜக கட்சியின் முகவர் போல் செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. இவர் பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா பற்றி பேசியது முதல் நடிகர் ரஜினிகாந்துடன் அரசியல் பேசியது வரை பல்வேறு விதமான சர்ச்சைகள் எழுந்துள்ளது. […]
