Categories
அரசியல் மாநில செய்திகள்

இது போன்ற ஆட்சியை நான் பார்த்ததே இல்லை…. விலை உயர்வு தான் திமுகவின் தாரக மந்திரம்…. அண்ணாமலை விமர்சனம்….!!!!

சென்னையில் மக்கள் தொகை கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் எந்த ஒரு அக்கறையும் இல்லாமல் தனது குடும்பத்துடன் லவ் டுடே படத்தை பார்க்கிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். எங்கே பார்த்தாலும் ஊழலின் இலக்கணமாக அமைச்சர்கள் இருக்கின்றனர். தமிழகத்தில் வெளியாக உள்ள அனைத்து படங்களையும் ஓடி ஓடி வாங்குகிறார்கள். விளம்பர முதலமைச்சராக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். இது போன்ற மோசமான ஆட்சியை நான் இதுவரை பார்த்ததே கிடையாது. விலை உயர்வு விளைவு […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, அதற்குரிய நிவாரணங்களையும்  அறிவித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம் பாடி பகுதிக்கு  நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டது மட்டுமில்லாமல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையால் […]

Categories
மாநில செய்திகள்

100-வது பிறந்த நாளை கொண்டாடும் தாய் மாமா….. நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதோடு ஆயிரக்கணக்கில் விவசாய நிலங்களும் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் மிகுந்த கவலையில் இருக்கிறார்கள். அதன் பிறகு கனமழையின் காரணமாக தமிழகத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, கடலூர், பூம்புகார் ஆகிய பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் அனைவரும் […]

Categories
மாநில செய்திகள்

தொடர் மழையால் பாதிப்பு!…. முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு…. பொது மக்களுக்கு நிவாரண உதவி வழங்கி ஆறுதல்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னை புறநகர் மற்றும் பெருநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன் பிறகு புறநகர் பகுதிகளான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுவர் போன்ற மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கியதோடு குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்‌. அந்த […]

Categories
மாநில செய்திகள்

“எம்பி தேர்தல்”…. உடனே களத்தில் குதிங்க…. வேட்டையை தொடங்கிய திமுக…. அதிரடி காட்டும் முதல்வர்…..!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில், உள்ளாட்சி தேர்தலிலும் ஆளும் கட்சியான திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. அதன் பிறகு வருகிற 2024-ம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை தற்போதிருந்தே பல்வேறு கட்சிகளும் வகுக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில் முதல்வர் ஸ்டாலினும் 2024-ம் ஆண்டு நடைபெறும் எம்பி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இதற்கான பணிகளை உடனடியாக தொடங்க […]

Categories
மாநில செய்திகள்

மாதம் ரூ.60 ஆயிரம் பெறுபவர்கள் ஏழைகளா?…. முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்…!!!!

10 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பாக சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இட ஒதுக்கீட்டால் தகுதி தகுதி போனது திறமை போனது என்று சொல்லி வந்த சிலர் இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை மட்டுமே ஆதரிக்கிறார்கள். நூற்றாண்டு காலமாக போற்றி பாதுகாத்து வந்த சமூக நீதிக் கொள்கைக்கு பேராபத்து தற்போது ஏற்பட்டுள்ளது. ஜாதியினால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தரமான சம்பவம்…. முதல்வர் அதிரடி…!!!!

சென்னை தலைமை செயலகத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 10%இடஒதுக்கீட்டுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு தமிழ்நாடு காங்., விசிக. மதிமுக, பாமக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் 10% இடஒதுக்கீடு அமல்படுத்தப் படாது என்பது உறுதியாகியுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

செய்து காட்டும் முதல்வர்…. இவரே உண்மையான விவசாயி…. அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமிதம்….!!!

முதல்வர் ஸ்டாலின் தான் உண்மையான விவசாயி என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணை வழங்கும் விழாவில் பேசிய அவர், இன்னும் 100 நாட்களில் மின் இணைப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் மின் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் ‘நம்பர் 1’ இடத்தை பிடிக்கும். நான் ஒரு விவசாயி என்று வார்த்தையில் சொல்லிக் கொண்டால் போதாது. நாலரை லட்சம் விவசாயிகள் இலவச மின்சாரத்திற்கு பதிவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நான் தான் நன்றி கடன் பட்டுள்ளேன்”…? கோவை தங்கம் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதல்வர்…!!!!!

கோவை தங்கம் வால்பாறை சட்டமன்ற தொகுதியில் 2001, 2006 ஆகிய சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 2 முறை எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றுள்ளார். ஆனால் அப்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்துள்ளார். இதனை அடுத்து 2021-ஆம் வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது மு க ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க-வில் இணைந்துள்ளார். கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி உடல் நலக்குறைவால் கோவை தங்கம் காலமானார். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் சாய்பாபா காலனியில் இருக்கும் கோவை தங்கம் வீட்டிற்கு […]

Categories
மாநில செய்திகள்

12 வருடங்களுக்குப் பிறகு….. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் CUMTA கூட்டம்….. மகிழ்ச்சியில் ஆணைய நிர்வாகிகள்….!!!!!

தமிழகத்தில் கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தின் போது CUMTA எனப்படும் ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் சென்னை மாநகராட்சி, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், மாநகரப் போக்குவரத்து கழகம், சிஎம்டிஏ, மாநில போக்குவரத்து துறை, நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டு வசதி போன்றவைகள் அடங்கும். இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் ஒருங்கிணைந்த சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை அதிமுக ஆட்சி காலத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை….. அதிர்ச்சியில் உறைந்த அரசு ஊழியர்கள்….. முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை….!!!!!

தமிழகத்தில் அரசாணை 115 பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த அக்டோபர் மாதம் 18-ஆம் தேதி தமிழக அரசு மனித வள மேம்பாட்டு துறை அரசாணை 115-ஐ பிறப்பித்துள்ளது. இது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்துவிட்டு காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் மனதில் பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“நூற்றாண்டுகால போராட்டத்தில் ஒரு பின்னடைவு”…. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை….!!!!!

பொருளாதார ரீதியாக பின்தங்கி முன்னேறிய வகுப்பினர்களுக்கான இட ஒதுக்கீடு, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது இல்லை என்று 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வில் 3 பேர் 10 சதவீத இடஒதுக்கீட்டு ஆதரவு தெரிவித்து இன்று தீர்ப்பு வழங்கி இருக்கின்றனர். இத்தீர்ப்பு தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அவற்றில் “பொருளாதார ரீதியாக பின் தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்காக கடந்த 2019ம் வருடம் ஒன்றிய பா.ஐ.க அரசு கொண்டுவந்த இடஒதுக்கீட்டு முறை […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் இன்று அவசர மீட்டிங்…. விரைவில் அனைத்து கட்சி கூட்டம்‌…. வெளியான முக்கிய தகவல்….!!!!!!

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 2019-ம் ஆண்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்காக 10 சதவீத இட ஒதுக்கீடு என்ற முறையை கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு அரசியலமைப்பு விதிகளில் இடமில்லை எனக் கூறி அரசியல் கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் 10% இட ஒதுக்கீடு செல்லும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மாதம்தோறும் 60,000 மேல் வருமானம் பெறும் உயர் ஜாதி […]

Categories
மாநில செய்திகள்

“இது திராவிட மாடல் அல்ல கார்ப்பரேட் மாடல்”….. படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில்….. முதல்வரை விமர்சித்த ஓபிஎஸ்….!!!!

தமிழகத்தில் திமுக அரசு வேலை வாய்ப்புகளை குறைப்பது வேலையில்லா திண்டாட்டத்தினை உருவாக்கும் என ஓ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டி டுவிட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால், 3.5 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும், புதிதாக இரண்டு லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும், என்றெல்லாம் வாக்குறுதி அளித்தது. இப்படி வாக்குறுதி அளித்த திமுக அரசு தற்போது அரசு பணிகளை எல்லாம் தனியார் மயமாக்குவது கண்டனத்திற்குரியது. எனவே தனியார் மையமாக்கும் அரசின் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

6,503 காலி பணியிடங்கள்…. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

தமிழகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் ஆய்வுக் கூட்டத்தில் ரேஷன் கடைகளில் உள்ள 6,503 காலி பணியிடங்களை பொங்கலுக்குள் நிரப்ப முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக முழுவதும் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் காலியாக உள்ள 5 ஆயிரத்து 578 விற்பனையாளர்கள் மற்றும் 925 கட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நவம்பர் 14 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

10% இடஒதுக்கீடு தீர்ப்பு….. சமூகநீதி போராட்டத்துக்கு பின்னடைவு…. முதல்வர் ஸ்டாலின்.!!

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு சமூகநீதி போராட்டத்தில் பின்னடைவு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சமூக நீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திட ஒருமித்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும். சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு காலப் போராட்டத்தில் 10% ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

“அன்புத்தோழருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்”…. என்றென்றும் நன்றியுடன்….. கமல்ஹாசன் ட்விட்.!!

தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், பிரபல நடிகருமான கமல்ஹாசன் இன்று தனது 68 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முக ஸ்டாலின் தனது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சர்ச்சை பேச்சு”…. சிக்கலை ஏற்படுத்தும் உடன்பிறப்புகள்….. தூக்கத்தை இழந்த முதல்வர் ஸ்டாலின்….. என்ன செய்யப் போகிறது திமுக மேலிடம்…..!!!!!

தமிழகத்தில் தற்போது திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், கட்சியின் மூத்த அமைச்சர்கள் சிலர் பொதுவெளியில் சில சர்ச்சை வார்த்தைகளை பேசுவது கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்திள்ளது. சமீபத்தில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தின் போது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மேடையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பொதுவெளியில் பேசும்போது வார்த்தைகளை பார்த்து கவனமாக பேச வேண்டும் என்று எச்சரித்து இருந்தார். அதன் பிறகு ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொள்ளும் என்ற பழமொழியை கூறி கட்சிக்காரர்கள் சிலர் […]

Categories
மாநில செய்திகள்

“நேற்று விமர்சனம், இன்று பாராட்டு”…. ஒரே நாளில் திடீர் பல்டி…. திமுகவை புகழ்ந்து தள்ளிய கேப்டன்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் பெருமளவு பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டாலும், சென்னையில் மக்கள் மழை நீரால் அவதிப்பட்டு தண்ணீரில் தத்தளிப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் கடந்த 2-ம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் ஒருநாள் மழைக்கே சென்னையில் உள்ள மக்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றனர். குறிப்பாக கொளத்தூர் தொகுதியில் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் […]

Categories
மாநில செய்திகள்

“அலங்கார வார்த்தைகளால் அபிஷேகம்”….. எங்களை குறை சொல்றதே வேலையா போச்சு…. முதல்வருக்கு எடப்பாடி கண்டனம்…..!!!!!

அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி டுவிட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது, இந்த விடியா அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டியின் போது அம்மாவின் ஆட்சியில் 10 வருடங்களில் நிறைவேற்றாததை ஒன்றரை வருடங்களில் நிறைவேற்றியதாக கூறி மார்தட்டியுள்ளார். அடுத்தவர் பெற்ற குழந்தைக்கு பெயர் வைப்பதையே இந்த ஆட்சியாளர்கள் வாடிக்கையாக வைத்துள்ளார்கள். அதிமுக ஆட்சியின் போது நடைபெற்று வந்த பணிகளில் ஒரு சில பணிகளை மட்டுமே செய்து முடித்துவிட்டு ஊரில் கல்யாணம் […]

Categories
மாநில செய்திகள்

“சென்னை வந்துட்டு ஸ்டாலினை சந்திக்காமல் செல்ல முடியுமா….?” அவர் என்னுடைய சகோதரர்…. முதல்வர் மம்தா பானர்ஜி நெகிழ்ச்சி…..!!!!

மேற்குவங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சென்னைக்கு வருகை புரிகிறார். இவர் முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்து பேச இருக்கிறார். இவர்கள் சந்திப்பு  2024-ம் ஆண்டு தேர்தலுக்கான வியூகம் என்று சொல்லப்பட்ட நிலையில், மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநர் இல. கணேசன் அதை மறுத்துள்ளார். அதாவது தமிழகத்தைச் சேர்ந்த இல. கணேசனின் அண்ணன் பிறந்தநாள் நாளைய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தான் முதல்வர் மம்தா பானர்ஜி சென்னைக்கு வருவதாக கூறியுள்ளார். ஆனால் முதல்வர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின்-மம்தா சந்திப்பு…. “பாஜகவை வீழ்த்த புதிய வியூகம்”…. தேசிய அரசியலில் எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

மேற்குவங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சென்னைக்கு வருகை புரிகிறார். இவர் முதல்வர் ஸ்டாலின் இன்று சந்தித்து பேச இருக்கிறார். இவர்கள் சந்திப்பு  2024-ம் ஆண்டு தேர்தலுக்கான வியூகம் என்று சொல்லப்பட்ட நிலையில், மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநர் இல. கணேசன் அதை மறுத்துள்ளார். அதாவது தமிழகத்தைச் சேர்ந்த இல. கணேசனின் அண்ணன் பிறந்தநாள் நாளைய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தான் முதல்வர் மம்தா பானர்ஜி சென்னைக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

“10 வருஷத்துல தமிழகம் சீரழிஞ்சிட்டு”…. ஆனா நாங்க சரி பண்ணிடுவோம்…. நம்பிக்கை தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் கடந்த 29-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழையினால் பொதுமக்கள் பாதிக்க கூடாது என்பதற்காக பல்வேறு இடங்களில் பாதுகாப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக குடிநீருடன் கழிவு நீர் கலப்பது, கழிவு நீர் வெளியேறுவதில் சிக்கல், மின் கசிவு, மின்வெட்டு பிரச்சனை, மரம் முறிந்து விழுதல், மழைநீர் தேங்கி நிற்பது போன்ற பல்வேறு விதமான பிரச்சினைகள் ஏற்படலாம். […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை…. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில்,அதிக கன மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதால் பொது மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைத்து தேவையான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை தாமதம் […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை: அதிகாரிகளுக்கு முதல்வர் போட்ட முக்கிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் நல்ல மழை பெய்து வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மழை நீர் வடிகால் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. சில இடங்களில் தேங்கியுள்ள நீரை மாநகராட்சி நிர்வாகத்தினர்கள் வெளியேற்றி வருகிறார்கள். இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் – அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார். […]

Categories
மாநில செய்திகள்

செய்தியாளர்களுக்கு மாதம் ரூ.‌ 10,000 ஓய்வூதியம்….. ஆணையை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் ஓய்வு பெற்ற 41 பத்திரிக்கையாளர்களுக்கு மாதம் 10,000 ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்ட துவக்கமாக 7 பேருக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இந்நிலையில் அன்றாடம் நாட்டில் நடக்கும் செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்லும் செய்தியாளர்கள் ஓய்வுக்கு பிறகு சோர்ந்து விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசின் சார்பில் மாதம் தோறும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. கடந்த 202-23 ஆம் ஆண்டில் செய்தியாளர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட பணிக்கால ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

முத்துராமலிங்கத் தேவரின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்! – முதல்வர் ஸ்டாலின் ட்விட்.!!

ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்! என்று முதல்வர் ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார்.. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 115 ஆவது ஜெயந்தி மற்றும் 60ஆவது குருபூஜை விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள் பலரும் பசும்பொன் கிராமத்திற்கு சென்று முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என் நேரு, அன்பில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: முதல்வர் ஸ்டாலின் பயணம் திடீர் ரத்து…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உடல்நலக்குறைவால் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லேசான காய்ச்சல் காரணமாக பரிசோதனைக்கு சென்றவர், ஒருநாள் தங்கி இருந்து சிகிச்சை எடுப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக முதல்வர் ஸ்டாலினின் இன்றைய பசும்பொன் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.முதுகு வலி ஏற்பட்டுள்ளதால் நீண்ட பயணங்களை தவிர்க்க முதல்வர் ஸ்டாலினை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.இதனால் தேவர் பிறந்த நாள் மற்றும் குருபூஜையில் அவரால் கலந்து கொள்ள முடியாது என்றும் முதல்வர் சார்பில் […]

Categories
மாநில செய்திகள்

ஆதாரங்கள் அழிப்பு?…. முதல்வர் ஸ்டாலின் அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!!

கோவை கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை 23ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கார் வெடித்து சிதறியதில் ஜமேஷா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அறிந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மேலும் கார் வெடித்து சிதறிய இடத்தில் சிறிய அளவிலான இரும்பு குண்டுகள், ஆணிகள் உள்ளிட்டதை சிதறி கிடந்தது. தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

7தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்….. முதல்வர் ஸ்டாலின் வெளியுறவு மந்திரிக்கு கடிதம்..!!!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் ஏழு பேரையும் அவர்களுடைய மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி டாக்டர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில் இலங்கை கடற்படை படையினரின் இத்தகைய நடவடிக்கைகள் மீனவர்களுடைய வாழ்வாதாரத்தை வெதுவாக பாதிக்கிறது. பாகிஸ்தான் ஜல சந்தியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் மீறப்படுவது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஆகும். தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை மீனவர்கள் எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை தேவை. […]

Categories
மாநில செய்திகள்

ஓ!… தூக்கமின்றி தவிக்கிறேன் என்றால் இதுதான் அர்த்தமா….? முதல்வர் ஸ்டாலின் சொன்னதுக்கு அமைச்சர் மா.சு விளக்கம்…..!!!

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் கடந்த 10-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது தான் எதிர்கொண்டுள்ள சிக்கல்களை ஆதங்கத்துடன் வெளிப்படுத்தினார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் அதிகமாக மழை பெய்தாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள். ஒருவேளை மழையே பெய்யா விட்டாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள். எந்த பக்கம் இருந்து தாக்குதல் வந்தாலும் அவை அனைத்துக்கும் பதில் சொல்ல வேண்டியவன் நான்தான். நான் ஒரு பக்கம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், மற்றொரு பக்கம் தமிழகத்தின் முதல்வராகவும் […]

Categories
மாநில செய்திகள்

“தீபாவளியை சீர்குலைக்க சதி திட்டம்”…. தமிழக-கேரள எல்லையை பூட்டி சீல் வைங்க…. முதல்வருக்கு கோரிக்கை…..!!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று சிலிண்டர் வெடித்து பயங்கர கார் விபத்து ஏற்பட்டதில் ஜமீஷா முபின் (23) என்ற வாலிபர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி ஒரு பேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப் பட்டிருப்பதாவது, கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை கார் வெடித்து பயங்கர விபத்தை ஏற்பட்டதில் ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்து சந்தேகப்படும்படியாக நடந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது‌. கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வரே! நீங்க வேற‌ லெவல்…. இன்று தரமான 2 சம்பவம்…. வீடியோ வைரல்…. குவியும் பாராட்டு…..!!!!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று  தலைமைச் செயலகத்திலிருந்து புறப்பட்டு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆம்புலன்ஸ் போன்ற அவசர ஒலியுடன் வந்து கொண்டிருந்தது. இதனால் முதல்வரின் வாகனத்தை காவல்துறையினர் நிறுத்தி ஆம்புலன்ஸ்-க்கு வழி விட்டனர். ஆம்புலன்ஸ் என்ற பிறகு முதல்வர் காரில் கிளம்பினார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல்வர் ஸ்டாலின் அண்ணா சாலையில் விபத்தில் சிக்கிய ஒரு நபரை மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
மாநில செய்திகள்

மக்களுக்கு இடையூறு…. இப்படி வேண்டாம்…. முதல்வர் எடுத்த அதிரடி முடிவு…!!!!

முதல்வர் ஸ்டாலின் தனது இல்லத்தில் இருந்து தலைமைச் செயலகம் செல்லும் வழியில் போக்குவரத்து சீர் செய்வதற்காக 20 அடிக்கு ஒரு காவலர் நிற்பது வழக்கம். அத்துடன், முதலமைச்சர் செல்லும் நேரத்தில் அவர் விரைவாக சென்று சேரும் வகையில், போக்குவரத்து சற்று நேரம் நிறுத்தப்படும். தற்போது முதல்வரின் அறிவுறுத்தலின்படி, மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் காவலர்கள் எண்ணிக்கை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு முதலமைச்சரின் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

“3 பேருக்கு பலே செக்” …. முதல்வர் ஸ்டாலின் போட்ட கணக்கு…. வேற லெவலில் உயரப் போகும் திமுக இமேஜ்….!!!!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை பொதுமக்களுக்கு வழங்காததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில், 17 காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதோடு தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது ஒவ்வொரு நிமிடமும் எடப்பாடி பழனிச்சாமிக்கு […]

Categories
மாநில செய்திகள்

“அதை நினைச்சா இன்றும் உடல் நடுங்குது”…. பேரவையில் பொங்கி எழுந்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் நேற்று சட்டப் பேரவையில் அறிக்கை தாக்கல் செய்தது. அதன்பின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பேசியதாவது  “சென்ற அ.தி.மு.க ஆட்சியில் தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தமிழக வரலாற்றில் மிகப் பெரிய கரும்புள்ளி ஆகும். அதனை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ இயலாது. துயரம் மற்றும் கொடூரமான அச்சம்பவத்தை இன்று நினைத்தாலும் உடல் நடுங்குகிறது. அந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நான், உடனே தூத்துக்குடிக்குச் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரூ.1,050 கோடி மதிப்பில் புது வகுப்பறைகள்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…..!!!!

ரூ.1,050 கோடி மதிப்பில் புது வகுப்பறைகள் கட்டப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரானது நேற்று கூடியது. இந்நிலையில் 110 விதியின் கீழ் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் பள்ளிக்கல்வி குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் “கடந்த ஓராண்டுக்காலத்தில் பள்ளிக் கல்வித் துறையானது மகத்தான பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து இருக்கிறது. இந்திய ஒன்றியத்திலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் வண்ணம், காலை உணவுத் திட்டம், இல்லம்தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும் […]

Categories
மாநில செய்திகள்

இந்திக்கு தாய்ப்பால்!… ஆனா மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பாலா?…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!!!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இந்தி திணிப்புக்கு எதிராக தனி தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்நிலையில் இந்திக்கு எதிரான தனி தீர்மானத்தின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது “இந்தியா முழுவதும் இந்தியை வலுப்படுத்த மத்திய அரசு துடிப்பதாக கூறினார். அதுமட்டுமின்றி மத்திய அரசின் கல்வி நிலையங்களுக்கும், மற்ற மொழி மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தடுக்க நினைக்கிறார்கள். முழுக்கமுழுக்க இந்திக்காகவே துடிக்கிறது அவர்களது இதயம். இந்திக்கு தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பாலும் புகட்ட நினைப்பது […]

Categories
மாநில செய்திகள்

இனிமே இப்படி நடந்தால் அவ்வளவுதான்…. அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் அமைச்சரவையை மாற்றியமைக்க நிர்ப்பந்தம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பொதுவெளியில் பேசும் போது எச்சரிக்கையாக இருங்கள். யாரும் உணர்ச்சிவசப்பட வேண்டாம்.சட்டசபையில் உங்களை தூண்டும் வகையில் எதிர்க்கட்சியினர் பேசினாலும் பொறுமையாக இருங்கள். முதலில் மக்களின் பிரச்சனைகளை கவனியுங்கள்.அமைச்சரவையை மாற்றம் செய்ய நிர்பந்தம் ஏற்படும் வகையில் யாரும் நடந்து கொள்ளாதீர்கள் என முதல்வர் ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

அனைவரிடமும் உண்மை!…. ஒரு படி மேலே சென்ற முதல்வர் ஸ்டாலின்…. புகழ்ந்து தள்ளிய ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம்….!!!!

பொது வெளியில் மனம்விட்டு பேசுவதற்கு வலிமையான மனம் தேவை. அவற்றில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருபடி மேலே போய் விட்டார் என ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது “பொது வெளியில் மனம்விட்டு பேசுவதற்கு வலிமையான மனம் தேவை. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் அனைவரிடமும் உண்மையைப் பேசி ஒருபடி மேலே போய் விட்டார். அவ்வாறு அவர் பேசியது இன்றைய உலகில் நேரடியான தொடர்பு மற்றும் திறந்த மனதுடன், அச்சமற்ற நிலையில் பேசுவது […]

Categories
மாநில செய்திகள்

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை….. அக்.,30ல் பசும்பொன் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்…!!

அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மரியாதை செலுத்த உள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 115வது பிறந்த நாள் விழா மற்றும் 60ஆவது குருபூஜை அக்டோபர் 30ஆம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. ஆண்டுதோறும் பசும் பொன் சென்று பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் என பலரும் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். இந்த ஆண்டும் அரசியல் கட்சி தலைவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

அக்டோபர் 30ல் பசும்பொன் சென்று முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்..!!

அக்டோபர் 30 ஆம் தேதி பசும்பொன் சென்று முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 115வது பிறந்த நாள் விழா மற்றும் 60ஆவது குருபூஜை அக்டோபர் 30ஆம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. ஆண்டுதோறும் பசும் பொன் சென்று பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் என பலரும் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். இந்நிலையில் அக்டோபர் 30ஆம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வாழும் வரலாறு” இந்திய திரையுலகின் அடையாளச் சின்னம்….. நடிகர் அமிதாப்பச்சனுக்கு முதல்வர் வாழ்த்து….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இவர் நேற்று தன்னுடைய 80-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த பிறந்த நாளை முன்னிட்டு திரை உலக  பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமிதாப்பச்சனுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டு இருந்தார். இதேபோன்று தமிழக முதல்வர் ஸ்டாலினும் நடிகர் அமிதாப்பச்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் […]

Categories
மாநில செய்திகள்

“சூழ்ச்சியை உடைத்து, ராஜாங்கம் நடத்து” முதல்வரை வாழ்த்திய கவிஞர் வைரமுத்து…. எதற்காக தெரியுமா….?

திமுக கட்சியின் 15-வது உட்கட்சி பொதுத் தேர்தல் சுமூகமான முறையில் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் திமுக கட்சியின் தலைவராக முதல்வர் ஸ்டாலின் 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக திரைப்பட பாடல் ஆசிரியரான கவிஞர் வைரமுத்து முதல்வர் ஸ்டாலினை அவருடைய வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை தன்னுடைய twitter பக்கத்தில் வைரமுத்து பகிர்ந்துள்ளார். அதோடு முதல்வர் ஸ்டாலினை வாழ்த்தி ஒரு கவிதையையும் பதிவு செய்துள்ளார். அதில் திமுக […]

Categories
மாநில செய்திகள்

“மொழிப்போரை எங்கள் மீது திணிக்க வேண்டாம்”…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்….!!!!

இந்தியை பயிற்று மொழியாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை எடுத்து இந்தியை கட்டாயமாக்க முயன்று இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணிக்க வேண்டாம் என்று அவர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். அனைத்து கல்வி நிலையங்களிலும் பயிற்று மொழியாக இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என்று அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற குழு பரிந்துரைத்து இருந்தது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

“என் நிலைமை இப்போ இப்படித்தான் இருக்கு”…. முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்…..!!!!!

திமுக-வின் பொதுக்குழு கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று காலை நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 5,000 பேர் கலந்து கொண்டிருந்தனர். பொதுக் குழுவில் கட்சியின் தேர்தல் ஆணையராக மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமி நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து தி.மு.க-வின் தலைவர் பதவிக்கு முதல்வர் ஸ்டாலின் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள சூழ்நிலையில், அவரது மனுவை 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வழிமொழிந்துள்ளதாக ஆற்காடு […]

Categories
மாநில செய்திகள்

“2 ம் முறையாக என்னை தேர்ந்தெடுத்த உடன்பிறப்புகள் அனைவருக்கும் நன்றி”…. முதல்வர் ஸ்டாலின் ட்விட்டர் பதிவு…!!!!

திமுக தலைவராக முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக போட்டி இல்லாமல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும் பொருளாளராக டி ஆர் பாலு, போட்டி இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் திமுக தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் மு க ஸ்டாலின் அவரது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, இனமானமும் சுயமரியாதையும் காக்கும் அறவியக்கமும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பொறுப்பிற்கு இரண்டாவது முறையாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: பதவி பறிக்கப்படும்…. அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை…..!!!!

சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கான்வென்ஷன் சென்டரில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது.அதில் திமுக தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், தலைவர் பதவிக்கு யாருமே வேட்பு மனு தாக்கல் செய்யாததால் ஸ்டாலினே மீண்டும் போட்டியின்றி தலைவராக தேர்வாகியுள்ளார். பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் நடைபெறும் இந்த பொதுக் குழுவில் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் மற்றும் பொருளாளராக டி ஆர் பாலு போட்டியின்றி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர்…. யார் யார் தெரியுமா….???

சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கான்வென்ஷன் சென்டரில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் திமுக தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், தலைவர் பதவிக்கு யாருமே வேட்பு மனு தாக்கல் செய்யாததால் ஸ்டாலினே மீண்டும் போட்டியின்றி தலைவராக தேர்வாகியுள்ளார். பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் நடைபெறும் இந்த பொதுக் குழுவில் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் மற்றும் பொருளாளராக டி ஆர் பாலு […]

Categories
மாநில செய்திகள்

திமுக-வினர் சொல்லிலும், செயலிலும் கவனமா இருங்க!…. இல்லன்னா தயங்க மாட்டேன்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

தி.மு.க.-வினரின் சொல்லிலும், செயலிலும் கவனமிருக்க வேண்டும் என்றும் இல்லையெனில் நடவடிக்கை மேற்கொள்ள தயங்க மாட்டேன் என்றும் தி.மு.க தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “திராவிட அரசியல் பேரியக்கமான தி.மு.க  கழகத்தின் 15வது அமைப்புத் தேர்தல் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக்கழகங்கள் என அனைத்து நிலைகளிலும் நிறைவு பெற்று நிர்வாகிகள் தேர்வு பெற்றுள்ளனர். தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான பொதுக் குழு அக்டோபர் 9ஆம் தேதி […]

Categories

Tech |