கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகில் உள்ள ஆச்சிப்பட்டி அண்ணா திடலில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் மாபெரும் மாநாடு நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு முன்னதாக கோவை அருகில் உள்ள ஈச்சனாரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள பி.ஏ.பி. அலுவலகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு மதியம் முதலவர் மு.க.ஸ்டாலின் வந்தார். அதன்பிறகு அங்கிருந்து மாலை 4.45 மணிக்கு அவர் புறப்பட்டு ஆச்சிப்பட்டியில் நடந்த மாநாட்டிற்கு சென்றார். […]
