உத்தரப்பிரதேசத்தில் வெப்ப நிலை குறைந்து கடும் பனிமூட்டம் நிலவி வருவதால், வீடற்றவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்யும்படி முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறார். தற்போது மாநிலத்தில் கடும் பனி நிலவி வருவதால் மக்கள் பலரும் நடுங்கி தவிக்கின்றனர். இவற்றில் வீடற்றவர்கள் மற்றும் ஆதரவற்ற ஏழை மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களை பாதுகாக்கும் விதமாக நிவாரண உதவிகளை வாங்கி அவர்களுக்கு விநியோகிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் […]
