2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை மீண்டும் கூடிய நிலையில், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார். குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என அவர் கூறியுள்ளார். மீன்வளத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்த காரணத்தினால் தான் மீன்வளத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடல் அரிப்பை தடுக்க சுற்றுச்சுவர் அமைக்க தமிழக அரசு […]
