முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.367.05 கோடி நன்கொடை கிடைத்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு கிடைத்த தொகையின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய்தடுப்பு பணிகளையும் நிவாரண பணிகளையும் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிவாரணப் பணிகளுக்கென முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், அரசு சார் நிறுவன ஊழியர்கள், அரசு […]
