நான் எப்படி புதுச்சேரியில் தவித்தேனோ அதேபோன்று தான் தமிழ்நாட்டிலும் முதல்வர் ஸ்டாலின் தவிக்கிறார் என்று புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார். திருவண்ணாமலையில் சுவாமி தரிசனம் செய்த நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, இந்திய அரசின் கவனக்குறைவு, அலட்சியத்தின் காரணமாக இந்திய மாணவர்கள் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இச்செயலுக்கு பிரதமர் மோடியின் மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். இதனிடையில் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வந்துள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு […]
