கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதியதாக அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. மேகதாது அணை திட்டத்திற்காக ரூ.9 ஆயிரம் கோடி செலவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு திட்ட அறிக்கையை கர்நாடக அரசு அனுப்பி வைத்துள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்கு அனுமதி கொடுக்க கூடாது என தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. […]
